30 Apr
30Apr

தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் திடீரென இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.
வனத்துறை வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! இதுகுறித்து தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வுக் குழுமம் விளம்பர எண்.1/2019 மற்றும் அறிவிக்கை 1/2019 நாள் 07.03.2019ன் படி தமிழ்நாடு வனச்சார்நிலை பணிகளில் அடங்கியுள்ள வனக்காவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான இணையவழி தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையில் பத்தி எண்.6(அ)-ன் மூலம் இணையவழி தேர்வு குறித்த உத்தேசமான கால அட்டவணையில் விண்ணப்பம் செய்வதற்குரிய ஆரம்ப நாள் மே-2019 முதல் வாரம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாகக் காரணங்களினால் வனத்துறை பணியிடத்திற்கான அறிவிப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு குறித்தான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read: வேலை, வேலை..! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை..!


I BUILT MY SITE FOR FREE USING