30 Sep
30Sep

சென்னை ; மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை - கிராமின் டாக் சேவகர்கள் கல்வித் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலியிடங்கள் - 10,935 வேலை இடம் - இந்தியா முழுவதும் விரிவான தகவல்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். கட்டாய கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகுதிப்பெற்றவர்களுக்குத் தனியாக வெயிட்டேஜ் எதுவும் வழங்கப்படுவதில்லை. பத்தாம் வகுப்பில் முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றவர்களுக்கு அவர்களுக்கு அடுத்தப்படியாகவே வாய்ப்பு அளிக்கப்படும். கணிப்பொறி அறிவினை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 60 நாட்களாவது கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்று சான்றிதழ் பெற்றிருக்கு வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழகம், போர்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்து பெறப்பட்ட கணிப்பொறிச் சான்றிதழாக இருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு - 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் - ஓசி, ஓபிசி பிரிவைச் சார்ந்த ஆண்கள் ரூ. 100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணம் செலுத்துபவர்கள் போஸ்ட் ஆபிஸ் கவுன்டரில் தங்களுடைய ரிஜிஸ்டர் நம்பரைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


I BUILT MY SITE FOR FREE USING